1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (17:13 IST)

தமிழரின் சவாலை ஏற்று சேனிடரி நேப்கினுடன் புகைப்படம் வெளியிட்டுள்ள பாலிவுட் பிரபலங்கள்

தமிழர் அருணாசலம் முருகானந்தம் விடுத்த சவாலை ஏற்றுகொண்டு பாலிவுட் பிரபலங்கள் பலரும் சேனிடரி நேப்கினுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர்.

 
தமிழ்நாடு கோவை பகுதியைச் சேர்ந்த அருனாசலம் முருகானந்தம் என்பவர் மலிவு விலையில் சேனிட்டரி நேப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு பேட் மேன் என்ற பெயரில் பாலிவுட்டில் தயாராகியுள்ளது.
 
இந்நிலையில் முருகானந்தம் டுவிட்டர் பக்கத்தில் சேனிடரி நேப்கினுடன் புகைப்படம் எடுத்து பதிவிடுங்கள் என்று சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் சேனிடரி நேப்கினுடன் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
 
இதேபோல் பலரும் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.