புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:16 IST)

ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் தமிழ் டிரைலர் வெளியீடு!

உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள பாஸ்ட் அண்ட் பியுரீயஸ் தமிழ் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாகம் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமான நிலையில் தற்போது ஜூன் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அதன் தமிழ் டப்பிங் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.