வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (16:19 IST)

வலிமை ரிலீஸ் தேதி இதுதானாம்… வெளியான ரகசியம்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என தயாரிப்பாளர் இப்போது முடிவு செய்து அதற்காக வேக வேகமாக பணிகளை முடுக்கிவிட்டுள்ளாராம். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.