செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 மே 2020 (12:55 IST)

விஜய் சேதுபதி தப்பா ஒன்னும் பேசலையே! – ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்!

நடிகர் விஜய் சேதுபதி தனியார் நிகழ்ச்சியில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தோண்டியெடுத்து அதை வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவதும், இந்து மதத்தை அவமதிப்பு செய்வதாகவும் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் ஜோதிகா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக செயல்பட்ட நடிகர் விஜய் சேதுபதி கடவுளுக்கு அபிஷேகம் செய்வது குறித்து பேசியிருந்தார். தற்போது அது திடீரென இணையத்தில் வைரலாகியுள்ளது. அதை ஷேர் செய்த இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் விஜய் சேதுபதி இந்து மதத்தை இழிவுப்படுத்தியிருப்பதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களம் இறங்கிய அவரது ரசிகர்களும், இன்னும் சிலரும் விஜய் சேதுபதி பேசிய அதே வசனத்தை கிருஷ்ணர் கெட் அப்பில் கிரேஸி மோகன் ஒரு மேடையில் பேசியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்,. கிரேஸி மோகன் பேசியதைதான் விஜய் சேதுபதியும் கூறியுள்ளார். ஆனால் விஜய் சேதுபதி மீது மட்டும் புகார் தெரிவிப்பது உள்நோக்கத்துடன் செயல்படுவது போல உள்ளதாக பலர் கருத்து கூறியுள்ளனர். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #WeSupportVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.