1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 10 மே 2020 (08:05 IST)

லாக்டவுனில் Weight போட்டுடீங்க... இடுப்பு மடிப்பெல்லாம் தொங்கிடுச்சு - சயீஷா டான்ஸ் வீடியோ ட்ரோல்!

லாக்டவுனில் Weight போட்டுடீங்க... இடுப்பு மடிப்பெல்லாம் தொங்கிடுச்சு - சயீஷா டான்ஸ் வீடியோ ட்ரோல்!
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின்      பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சல்பேட்டா" என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பிரபலங்களுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம், சயீஷா தனது இன்ஸ்டாவில் ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படமொன்றை வெளியிட்டு வருகிறார். தற்போது சயீஷா டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்ஸ் லாக்டவுனில் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு எடை கூடிடுச்சு நல்லா ஒர்க் பண்ணுங்க என கமெண்ட்ஸ் செய்து அவரது நடனத்தை பாராட்டி வருகின்றனர்.