செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 மே 2020 (20:45 IST)

விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். – ஹெச்.ராஜா

பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற விஜய் சேதுபத்தி அந்த மேடையில் நடந்த சம்பவம் ஒன்றை குட்டி கதையாக கூறினார். அவர் பேசியதாவது, "இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கிண்டலடிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

இந்துக்கள் வழிபடும் கோவில் அபிஷேகம் செய்துகொண்டிருந்தபோது சிறுமி ஒருவரை அவரது தாத்தாவிடம், "எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது காட்ட மாட்டேன் என்கிறார்கள்?’’ என்று சந்தேக கேள்வி கேட்டார், அதற்கு தாத்தா மழுப்பலான பதிலை கூறி குழந்தையை சமாளித்தார் என கூறி ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என தன்னுடைய கருத்தினை தெரிவித்திருந்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜ தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துபத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.