செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (13:56 IST)

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்; செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்!

வலிமை படத்தில் பிஸியாக நடித்து வந்த நடிகர் அஜித் கமிஷனர் அலுவலகம் வந்த நிலையில் அவரோடு செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் குவிந்தனர்.

பிரபல தமிழ் நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் தொல்லை செய்து வந்த நிலையில், யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித் சென்றார். அவரை கண்டதும் உடனடியாக சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.