1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)

உன் சைசென்னா, அவ வயசென்ன? ஆர்யாவை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகை சாயிஷாவுடனான காதலை சொல்கிய ஆர்வாவிற்கு பலர் வாழ்த்து சொல்லி வந்தாலும் கூட அவர்களின் வயசு வித்தியாசம் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகர் ஆர்யாவும் , நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக பணியாற்றியதிலிருந்நு இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்தி உண்மையில்லை என்று எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் சாயிஷா உடனான காதலை உறுதி செய்து  விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக ஆர்யா அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இதனை நடிகை ஆயிஷாவும் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு வருகிற மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கு கிட்டதட்ட 17 வருடங்கள் வயது வித்தியாசம்.

இதனைப்பார்த்த ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் ஆர்யாவிற்கு வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் இருக்கின்றனர். ஒரு சிலர் அவர்களின் வயது வித்யாசம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். உங்கள் வயதென்ன, அவர்களின் வயதென்ன கிண்டலடித்து வருகின்றனர். காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை என பலர் இதற்கு பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.