புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (15:37 IST)

துண்டு சீட்டு ஸ்டாலின் – சமூக வலைதளங்களில் அதிகமாகும் கிண்டல் !

திமுக தலைவரும் முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனுமாகிய ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசும் போது துண்டு சீட்களை வைத்துப் பேசுவதாக குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பதவியேற்றதில் இருந்து கலைஞரைப் போல ஓயாமல் பொதுக்கூட்டங்கள், மக்கள் பணிகள் என தமிழகமெங்கும் பம்பரமாய் சுற்றி வருகிறார். அதேப் போல மக்களும் ஸ்டாலினை அனைத்து விஷயங்களிலும் அவரது தந்தை கலைஞரோடு ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மேடைப் பேச்சிலும் பத்திரிக்கையாலர்களின் கேள்விகளுக்கு சாதூர்யமாகப் பதில் சொல்வதிலும் உலகப் புகழ் பெற்றவர். ஆனால் ஸ்டாலினோ மேடைகளில் பேசும்போது கலைஞரை போல மடைதிறந்த வெள்ளம் போல பேசாமல் நிறுத்தி நிதானமாகப் பேசக்கூடியவர். மேலும் கலைஞர் எந்த விதமானக் காகிதங்கள் மற்றும் குறிப்புகள் இன்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடியவர். ஆனால் ஸ்டாலின் தனது கைகளில் குறிப்புகள் அடங்கிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரே வசனத்தை திரும்ப திரும்பப் பேசுவது (நான் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசவில்லை), தவறாகப் பழமொழிகளைக் கூறுவது ( யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே) போன்ற தவறுகளையும் அடிக்கடி செய்து வருகிறார். ஸ்டாலினின் இந்த துண்டு சீட் மற்றும் பிழைகளின் கூடியப் பேச்சு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக இணையதள வாசிகளும் திமுகவின் எதிரணிகளை சேர்ந்தவர்களும் துண்டு சீட்டு ஸ்டாலின் எனக் கேலி செய்து வருகின்றனர்.

இது சம்மந்தமாக திமுகவின் ஆதரவாளரும் பெரியாரிய இயக்கப் பேச்சாளருமான வே மதிமாறன் கடுமையாணக் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ஸ்டாலின் துண்டு சீட்டு வைத்துப் பேசுவதில் என்ன தவறு?. ஜெயலலிதா பேப்பர் பண்டலையே வச்சிகிட்டு பேசியபோது என்ன செய்தீர்கள் என திமுக காரர்கள் கேட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு இணையதளவாசி ஒருவர் ‘பேப்பர் வச்சிகிட்டு படிக்கிறதுல தப்பு இல்லை. ஆனால் அதையும் தப்பு தப்பா படிக்கிறாரு‘ என நக்கலாகப் பதிலளித்துள்ளார்.