வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)

ஆர்யாவுடன் காதல்! டும் டும் டும் தேதியுடன் கன்ஃபார்ம் செய்த ஷாயிஷா!

ஆர்யா உடனான காதலை உறுதி செய்து  விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகை ஷாயிஷா அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். 


 
காதலர் தினமான இன்று தன் காதலை ஆர்யாவுக்கு தெரிவித்த நடிகை ஷாயிஷா கூடவே  கல்யாண தேதியையும் அறிவித்துள்ளார். 
 
நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் ஜோடிப்புறாக்கள்  ஆர்யா , ஷாயிஷா என கிசு கிசுக்கப்பட்டனர்.  
 
இந்நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் காதலர் தினமான இன்று ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து  தங்கள் காதலை உறுதி செய்துள்ளார் நடிகை ஷாயிஷா. 
 
பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு வருகிற மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம் என்று கூறி காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 
 
ஆர்யா, சயீஷாவின் இந்த  திருமண அறிவிப்பு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளதுள்ளது. அதே நேரத்தில் இவர்களின் இந்த காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.