வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (15:38 IST)

தெருக்கூத்து மாதிரி நடந்த இளையராஜா75: பார்த்திபன் கடும் தாக்கு!!

இளையராஜா 75 நிகழ்ச்சி ஏற்பாடுகள் போதிய திட்டமிடாமல் நடந்திருப்பதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
 
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இளையராஜா 75 நிகழ்ச்சியை மாபெறும் நிகழ்ச்சியாக வடிவமைக்க பார்த்திபன் பயங்கரமாக மெனக்கெட்டார் என்றே சொல்லலாம். ஏ.ஆர். ரஹ்மான் இளையராஜா 75க்கு வந்ததற்கு பார்த்திபன் தான் முக்கிய காரணம்.
 
அப்படியிருக்க பார்த்திபன் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்து அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இளையராஜா 75 நிகழ்ச்சியை இப்படி நடத்தலாம் அப்படி நடத்தலாம் என பல்வேறு ஐடியாக்களை விஷாலுக்கு கொடுத்தேன். இது விஷால் தரப்புக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக விஷாலின் நண்பர்களான ரமணாவிற்கும் நந்தாவிற்கும் நான் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது பிடிக்கவில்லை.
 
இதனால் நான் சொல்வதையே அவர்கள் கேட்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை என நினைத்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இதுகுறித்து விஷால் என்னிடம் இதுவரை விசாரிக்காதது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
 
இளையராஜா 75வில் போதிய திட்டமிடல் இல்லாததால், நிகழ்ச்சிகள் பல சொதப்பல்களாக இருந்ததாகவும், ஒரு தெருக்கூத்து போல நடைபெற்றதாகவும், பார்த்திபன் காட்டமாக விமர்சித்திருக்கிறார். உண்மையிலேயே பார்த்திபன் கூறியது போல இளையராஜா 75வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது என நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.