திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:39 IST)

விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரும் பிரபல நடிகை

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அவர் முடிவெடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற  இண்டிகோ விமானம் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

ஆனால், விமானத்தில் இருந்த பயணிகளை 4 மணிநேரமாம வெளியேற்றாமல் தலா.ரூ.5000 பணம் கொடுத்தால் மட்டுமே வெளியே அனுப்புவோம் என ஊழியர்கள் கூறியதாக நடிகையும்,  எல்.எல்.ஏவுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.