ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (17:57 IST)

பிரபல நடிகைக்கு கொரொனா உறுதி!

நடிகர் வினய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் உன்னாலே உன்னாலே. இப்படத்தில் ஹீரோயினா நடித்தவர்  தனீஷா  முகர்ஜி. இவர் தற்போது பாலிவுட் படங்களில் கவனம்  செலுத்தி வருகிறார். அத்துடன் சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த தனீஷா முகர்ஜி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை தனீஷா, தனக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதல் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.  என்னுடம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.