பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்
தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் சினிமா துறையில் உள்ளோரிடம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
தமிழ், கன்னடம் ,மலையாளம் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் வியக்கு தங்கையாக நடித்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்து புகழ்பெற்றவர்.
சமீப காலமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த விஜயலட்சுமி தற்போது மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயலட்சுமியை அவரது தங்கைதான் கவனித்து வருகிறார். மேற்கொண்டு சிகிச்சைக்காக சினிமா துறையினரிடம் உதவி கேட்டுள்ளார் என்று தெரிகிறது.