வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (16:06 IST)

டாக்டர் பட்டம் பெற்ற பிரபல நடிகர்

Hip Hop aadhi
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி  டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஹிஃபாப் தமிழா ஆதி. இவர், கடந்த 2011 ஆம் ஆண்டில் கிளப் லே மப்பு லே என்ற ஆல்பம் வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னர். இவர் சுந்தர் சி-ன்  ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர்,  கடந்த 2017 ஆம் ஆண்டு மீ’சைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர்,  நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பரிவு, வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலையில் இசைத்துறையில்  பிஎஸ்டி படிப்பு படித்து வந்த ஆதி, இன்று  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இசைத்துறையில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.