பிரபல நடிகர் நாளை முதல் ஷூட்டிங்கில் பங்கேற்பு .. செண்டிமெண்ட் டுவீட்
கொரொனா காலத்தில் சினிமாத் துறையின தங்கள் படங்களை ஒட்டி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரிய படங்களையும் அதில் வெளியிட சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் ஷூட்டிங் எதுவும் நடத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்குப் பிறகு திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்கப் போவதாக விஜய் ஆண்டனி டுவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான் எனப் பதிவிட்டுள்ளார்.