புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்...மருத்துவமனையில் அனுமதி

sanjai dutt
sinoj| Last Modified செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (23:03 IST)

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இப்போது அவர் நான்காம் கட்ட புற்றுநோய் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஒருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா விரைவில் செல்லவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் ‘மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் சிறிதுகாலம் திரையுலகப் பணிகளில் இருந்து விலகி இருக்கிறேன். ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவில் நடிகர் சஞ்சய் தத் மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும்
அவர் வீட்டிலிருந்து புறப்படும் முன் எனக்காகப் பிராத்தியுங்கள் எனக் கூறினார். அவர் முகக்கவசத்துடன் வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படங்கள் சமூகதலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதில் மேலும் படிக்கவும் :