செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (07:47 IST)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த சில வருடங்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் படங்கள் இந்தியில் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘மெயின் அடல் ஹூம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வாஜ்பாயாக முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான போது கவனம் ஈர்த்தது. போஸ்டரில் பங்கஜ் திரிபாதி பார்ப்பதற்கு வாஜ்பாய் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.