1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (19:14 IST)

மணத்தி கணேசனின் பயோபிக் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

DHURUV VIKRAM-MARI SELVARAJ
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் துருவ் விக்ரம். இவர்  கடந்த  2019 ஆம் ஆண்டு ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பின்னர், அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இவரது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

எனவே அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும், இப்படத்திற்கு துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வரும் நிலையில், அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் இப்பட ஷூட்டிங் தொடங்கும் எனத் தகவல் வெளியாகிறது.