1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (17:24 IST)

இளையராஜா பயோபிக்கில் தனுஷுடன் சிம்பு இணைகிறாரா? என்ன கேரக்டர்?

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என வெளியான செய்தியை பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சிம்புவிடமிருந்து தகவல் உறுதி செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்ற நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருவரும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில முக்கிய கேரக்டர்களில் நடிக்க பிரபல நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Edited by Siva