புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2020 (21:13 IST)

சாவுல கூட நியாமில்ல - நடிகர் கவின் ஆவேசம் !

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில்  இளம் பெண்  ஒருவர் சிலரால் குட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது நாக்கு அறுபட்டும்,  முதுகெலும்புகள் உடைந்து இருந்தாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணடைந்தார்.

இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர் சம்மதம் இன்றி அவரைத் தகனம் செய்துவிட்டதற்கு பலரும் எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில், சாவில் கூட நியாயம் இல்லை#JusticeForManishaValmiki என்று பதிவிட்டுள்ளார்.