ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:12 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விஜய் டிவியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பை இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் அனைவரும் தயார் செய்யப்பட்டு ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தவுடன் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்மு, பாடகர் வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, நடிகை ரேகா, ஷிவானி நாராயணன், ரியோராஜ், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நடிகையின் சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அனேகமாக பிக்பாஸ் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும் இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து அந்த அறிவிப்பு என்ன என்பதை பார்க்கலாம்