புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (08:16 IST)

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ விஜய்யின் ‘க்த்தி’ படத்தின் காப்பியா?

சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் விஜய் நடித்த ’கத்தி’ படத்தின் காப்பி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலையும், செகண்ட் லுக் போஸ்டர் நேற்று நள்ளிரவு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட்லுக் போஸ்டரில் பிணங்களின் முன்னர் சூர்யா உட்கார்ந்திருப்பது போன்ற அட்டகாசமான காட்சி உள்ளது 
 
இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் 2014 ஆம் ஆண்டிலேயே விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் போஸ்டரின் காப்பி தான் இந்த போஸ்டர் என்று இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் 
 
எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர் மட்டும்தான் கத்தி படத்தின் காப்பியா அல்லது படமே கத்தி படத்தின் காப்பியா என்பதை படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது