புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (08:01 IST)

நள்ளிரவில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ செகண்ட்லுக்!

நள்ளிரவில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ செகண்ட்லுக்!
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூர்யா 40 திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று நேற்று மாலை வெளியானது என்பதும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளது இந்த போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து சூர்யா பிறந்த நாளில் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யாவின் கையில் ரத்தக்கறையுடன் வாள் ஒன்றை வைத்திருக்கும் சூர்யாவின் முன்னர் பிணங்கள் குவிந்து போன்று இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகிறது. சூர்யாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோடியாக பிரியங்கா நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது