ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (15:52 IST)

பேன் இந்தியா என்ற வார்த்தை எரிச்சலூட்டுகிறது… பிரபல நடிகர் கருத்து!

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் துல்கர் சல்மான் பேன் இந்தியா திரைப்பட ரிலிஸ்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ஹே சினாமிகா மற்றும் சல்யூட் ஆகிய படங்கள் வெளியாகி கவனிக்கப்பட்டன. மூன்று மொழிகளில் நடித்தாலும் துல்கர் துல்கர் இதுவரை இரு மொழிப் படங்களில் நடித்ததில்லை.

இந்நிலையில் சமீபகாலமாக பேன் இந்தியா ரிலீஸ் என்று சொல்லப்படும் அனைத்து மொழிகளிலும் படங்களை ரிலிஸ் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளது. ஒரு மொழியில் எடுத்து அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள துல்கர் ‘ஒரு மொழியில் அம்மக்களின் பண்பாட்டை வைத்து எடுக்கப்படும் படங்களை பேன் இந்தியா ரிலிஸ் செய்வதில் உடன்பாடில்லை. அந்த வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.