வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (15:54 IST)

துல்கர் சல்மானின் அடுத்த படம்… நேரடி ஓடிடி ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள சல்யூட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் என்ற திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார்.

இந்த படம் முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் திரையரங்க வெளியீட்டுக்காக காத்திருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை காரணமாக திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த மாத இறுதியில் நேரடி ஓடிடி ரிலிஸாக வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.