வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:57 IST)

துல்கர் சல்மானின் ''ஹே சினாமிகா ''பட டிரைலர்...இணையதளத்தில் டிரெண்டிங்

துல்கர்    சல்மான் - பிரபல நடிகை காஜல் அகர்வால்   நடிபில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ படத்தின் டிரைலர் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
 
துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிப்பில் பிருந்தா இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவான திரைப்படம் ‘ஹே சினாமிகா’
 
இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் ஆக இருக்கும் இந்த இரண்டரை நிமிட டிரைலரை ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் தற்போது இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.