துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!
துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!
கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
குறிப்பாக கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் இந்த இக்கட்டான நிலையில் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.