1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (18:38 IST)

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் தமிழகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
இதனை அடுத்து ஆறு மாநிலங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைவரையும் கொரனோ வைரஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது