குட்டி சேது பொறந்தாச்சு... மறைந்த நடிகர் சேதுவின் மனைவிக்கு ஆண் குழந்தை!
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்திருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இவர் நடிகராக மட்டுமின்றி எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் மருத்துவ நிபுணராகவும் இருந்து வந்தார். பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் மருத்துவ ஆலோசனைகளை கொடுத்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். மரணிக்கும் போது அவரது மனைவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்ப்போது அந்த குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆம், மறைந்த நடிகர் சேது அவரது மனைவியின் வயிற்றில் மகனாக மறுபிறவி எடுத்துள்ளார். இது குறித்து அவரது தந்தை " சேதுவிற்கு சிங்க குட்டி பொறந்திருக்கான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.