"என் அன்பு நண்பர் மரணத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை" - மீளா துயரத்தில் நடிகர் சந்தானம்!

papiksha| Last Updated: வெள்ளி, 27 மார்ச் 2020 (09:34 IST)

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்திருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து
'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.


இவர் நடிகராக மட்டுமின்றி எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் மருத்துவ நிபுணராகவும் இருந்து வந்தார். பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் மருத்துவ ஆலோசனைகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். வயது 37 வயதாகும் இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த நடிகர் சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன். எனக்கு மிகுந்த மன அழுத்தமாகவும் உள்ளது. அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும்" என மிகுந்த துயரத்தில் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :