செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (22:24 IST)

வடிவேலு அப்படிச் செய்திருக்கக் வேண்டாம்...பிரபல நடிகர் வேதனை!

பிரபல இயக்குநரும்  குணச்சித்திர நடிகருமான மனோபாலா சமூக வலைதளமான யூடியுப் தளத்தில் வேஸ்ட் பேப்பர் என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல பிரபலங்களுடன் நேர்காணல் நடத்தி வருகிறார்..

இந்நிலையில்,   சமீபத்தில்  இவரது நேர்காணலில் சிங்கமுத்து கலந்து கொண்டு, நடிகர் வடிவேலுவை குறித்து பேசியிருந்தார்.

இந்தப் பேட்டியை  நடிகர் மனோபாலா  நடிகர் சங்க குரூப்பில் பகிர்ந்துள்ளார்.  இதைப்பார்த்த வடிவேலு, இந்தப் பேட்டியால் தான்  மன உளைச்சல் அடைந்திருப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மனோபாலா, நடிகர் வடிவேலு என்னை அழைத்து இந்த வீடியோவை தூக்கி விடச் சொல்லியிருக்கலாம்… புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

சில வருடங்களாக வடிவேலுக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான நில விவகரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.