ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (22:15 IST)

கொள்ளையடிக்கும் மின்சார வாரியம்...பிரபல நடிகர் டுவீட்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா தமிழக மின்சார வாரியத்தைப் பற்றி விமர்சித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் முன்பைவிட அதிகரித்து வருகிறதாக தகவல்கள் வெளியாகிறது. எதிர்க்கட்சிகளும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரொனா தாக்கம் ஆரம்பித்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் பழைய மின்சாரம் கட்டணங்களை அறிவித்தது. ஆனால் தற்போது கணக்கெடுக்கும்போது மின்சார ரீடிங்கில் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உருவாகிருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா  தமிழகத்தில் மின்சார கட்டணத்தை பற்றி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கொரோனா காலத்தில்   கொள்ளையடிக்கிறது என்பதை யார் அறிவீர்கள் ’’என்று பதிவிட்டுள்ளார்.