செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (18:35 IST)

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டிக் கொலை : மாணவர்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வட்டார வள மைய உள்ள சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். 
 
இவரது குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று வடிவேல் முருகனை , அவரது  மைத்துனரான  அற்புத செல்வம் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக்கொன்றார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேல் முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்தக் கொலையை செய்த குற்றவாளி அற்புத செல்வத்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.