திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (20:14 IST)

மிஷ்கினின் ‘அஞ்சாதே 2’ படத்தில் பிரபல நடிகர்

மிஷ்கினின் இயக்கத்தில் நரேன் நடித்த அஞ்சாதே’ திரைப்படம் கடந்த 2008 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம்தான் மிஷ்கினை தமிழகம் முழுவதும் புகழ் பெற வைத்தது என்றால் அது மிகையாகாது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நரேனுக்கு பதில் போலீஸ் கேரக்டரில் அருண்விஜய் நடிக்க இருப்பதாகவும் வில்லன் வேடத்தில் ஒரு புதுமுக நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘காவு’ என்ற டைட்டிலை தேர்வு செய்து இருப்பதாகவும் இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சிம்புவுக்காக மிஷ்கின் ஒரு அட்டகாசமான திரைக்கதையை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் அஞ்சாதே 2‘ படம் முடிந்தவுடன் சிம்பு நடிக்கும் படத்தை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது