நடிகர் அஜித்தின் அடுத்த படம் இயக்குகிறாரா விஷ்ணுவர்தன்... ?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அவரது கால்ஷீட்டுக்காக பல இயக்குநர்கள் தவம் கிடந்து அவரை வைத்து படம் இயக்க வேண்டுமென காத்துக் கொண்டுள்ளனர்.
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் பில்லா. தமிழ் சினிமாவில் புது திரைக்கதை பாணி மற்றும் ஆக்சன் சரவெடியாக வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் ரசிக்க வைத்தது.
இந்நிலையில், பில்லா படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ’பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. நேற்று மாதிரி உள்ளது. ஆனால் புதிதாக உள்ளது அஜித் சாருடன் இணைந்து பணியாற்றியது. விரையில் உங்கள் ஆசிர்வாதத்தில் அவரை சந்திப்போம் ‘ என தெரிவித்துள்ளார்.