திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (18:34 IST)

’தல’ அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தேதி அறிவிப்பு

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’வலிமை’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது
 
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆகிக் கொண்டு வருகிறது என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த படத்தில் அஜீத் ஒரு ’வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதால் அந்த கேரக்டருக்கு தயாராக தனக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாங்கியதாகவும் அதனால் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதமாகதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அந்த கேரக்டரில் நடிக்க அஜித் தயாராகி விட்டதால் இம்மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்தன. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என கூறப்படுகிறது
 
அஜித்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய், நிக்கி கல்ராணி உள்பட ஒருசிலர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ’நேர்கொண்டபார்வை’ படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் அதை படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த படத்தை உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்