செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (09:58 IST)

TTF வாசன் ஒரு குப்பை… என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்… இயக்குனர் செல்அம் ஆவேசம்!

யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் போஸ்டர் வெளியானதோடு சரி, படத்தின் ஷூட்டிங் ஒருநாள் கூட நடக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்துள்ளார். படத்துக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் அவரை நீக்கியதாக செல்அம் தெரிவித்தார். இதையடுத்து தன்னிடம் சொல்லாமல் எப்படி பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்கலாம் எனக் கோபப்பட்டு பேசியிருந்தார் வாசன்
.
இந்நிலையில் வாசன் பற்றி பேசியுள்ள செல்அம் “டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை. அவர் தன் அம்மாவையே ஜெயில் வாசலில் நிற்கவைத்தவர். மனிதன் வாழக்கை முழுவதும் தவறு செய்துகொண்டே இருக்கக் கூடாது, பைக்கை வேகமாக ஓட்டி அவர் இளைஞர்களைக் கெடுத்து வருகிறார். என்னைத் திட்டி வீடியோ போட்டு அதன் மூலம் மூன்று லட்சம் ரூபாய் சம்பாதித்து வாழ்ந்து வருகிறான். அதை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.