மீண்டும் தமிழுக்கு வரும் நிவின் பாலி… இயக்குனர் இவரா?
நடிகர் நிவின் பாலி ரிச்சி படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.
நடிகர் நிவின் பாலி நேரம் மற்றும் பிரேமம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரிச்சி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அவர் மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தை கற்றது தமிழ் மற்றும் பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் ஏற்கனவே சிம்புவுக்கு ஒரு கதை சொல்லி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிவின் பாலி படத்தின் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.