வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:22 IST)

இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடாது… ஆனால்? விஜய் பட இயக்குனர் டிவீட்!

இந்தி திணிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கபட்டு வரும் நிலையில் இயக்குனர் பேரரசு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வர இருக்கும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரண்ட் செய்து வருகின்றனர். இதில் இளைஞர்கள்,  அரசியல் எதிர்க்கட்சிகள் , நடிகர் நடிகைகள் என பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகி சமுகவலைதளமே களேபரமாகி உள்ளது. இந்நிலையில் பாஜக உறுப்பினரும் இயக்குனருமான பேரரசு இது சம்மந்தமாக ‘நீங்கள் இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடப் போவதில்லை! உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும்! உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால் தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள்!’ எனக் கூறியுள்ளார்.