வேணும்னே போஸ்டிங் போட்டு இந்தி படிக்க சொல்றாங்க! – ஜிஎஸ்டி அதிகாரி புகார்

Prasanth Karthick| Last Modified திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:53 IST)
ஜிஎஸ்டி அலுவலக இந்தி பிரிவில் வேண்டுமென்றே தனக்கு பதவி அளித்து இந்தி படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கை வாயிலாக இந்தி கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தின் இந்தி பிரிவில் இந்தி மொழியே தெரியாத தமிழரான பாலமுருகன் என்பவரை துணை ஆணையராக நியமித்துள்ளனர். மேலும் அவரை அந்த பிரிவில் பணியாற்றுவதற்காக இந்தி படிக்க சொன்னதாக தெரிகிறது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் வாரியத்திற்கு பாலமுருகன் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியே தெரியாத தமிழர்களை இந்தி பிரிவுகளில் பணியில் அமர்த்தி இந்தி படிக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதுவும் ஒரு வகையில் இந்தி திணிப்புதான் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :