செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:38 IST)

மறுபடியும் முதல்ல இருந்தா..! முகக்கவசத்தில் #இந்தி தெரியாது போடா!

மும்மொழி கொள்கையை எதிர்த்து இந்தி தெரியாது போடா என்ற டீசர்ட் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது முகக்கவசங்களிலும் இந்த வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் ”இந்தி தெரியாது போடா”, “ஐ அம் தமிழ் பேசும் இந்தியன்” போன்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டுகளை அணிந்து இணையத்தில் பதிவிட அது பெரும் ட்ரெண்டாக மாறியது. இப்படி டீசர்ட் அணிவதால் எல்லாம் மாறிவிடுமா என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கடந்த இரு நாட்களாக இந்த டீசர்ட் ட்ரெண்டிங் இந்திய அளவில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது முகக்கவசங்களிலும் இந்த வசனங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. மீண்டும் முகக்கவசங்களின் புகைப்படங்களை பலர் பதிவிட்டு இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.