புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:59 IST)

டிக் டாக்கில் மோசமாக செயல்படும் பெண்களை ஜெயிலில் போடவேண்டும்… இயக்குனர் பேரரசு சர்ச்சை பேச்சு!

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் சினிமா பிரபலங்கள் சர்ச்சையான கருத்துகளைப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது.

ரெயின்போ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ’பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதில் ‘இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக பேசுகிறது. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆண்களால் மட்டும் நடப்பதில்லை. பெண்களாலும்தான் ஏற்படுகிறது. டிக்டாக்கால் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்கமுடியவில்லை. அதில் பெண்கள் நடந்துகொள்கிற விதமும் பேசுகிற பேச்சும் சகிக்கமுடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.