இயக்குனர் மோகன் ஜி யின் அடுத்த படம் குறித்து இன்று வெளியாகும் அப்டேட்!
இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சர்ச்சையான திரைப்படங்களான திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான படங்களாக அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கினார். தன்னுடைய திரௌபதி படத்தின் கதாநாயகனான ரிச்சர்ட்தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இன்று அந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது.