தரமான 8k தரத்துக்கு மாற்றப்படும் மணிரத்னத்தின் பழைய திரைப்படங்கள்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கி மற்றும் தயாரித்த சில படங்கள் இப்போது டிஜிட்டலில் 8கே தரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு இப்போது பழைய படங்கள் எல்லாம் அவற்றில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த படங்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரிஸ்டோரேஷன் என சொல்லப்படும் டிஜிட்டலில் ஹெச்.டி., 4K, 8K எனத் தரமுயர்த்தப்படுகின்றன.
அந்தவகையில் இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய், இருவர், தளபதி, ரோஜா உள்ளிட்ட அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த படங்கள் அனைத்தும் இப்போது 8K தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்துவருகின்றன. இதை சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் பார்வையிட்டுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.