வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (10:47 IST)

விஜய் சேதுபதியோடு கைகோர்த்த மகிழ் திருமேனி !

எஸ் பி ஜனநாதன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரோகாந்த் இயக்கத்தில் இப்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்துக்கு இப்போது விஎஸ்பி 33 எனத் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.

இந்தப்படம் சம்மந்தமாக இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். அதில் இந்தப் படத்தில்  முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்குப் பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.