செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (16:14 IST)

லிப் டூ லிப் காட்சிக்காக நடிகையிடம் கையெழுத்து வாங்கிய இயக்குநர்

ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க நடிகையிடம் அப்படத்தின் இயக்குநர் ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்கினாராம்.


 

 
ரங்கா இயக்கத்தில் லொள்ளு சபா ஜிவா மற்றும் சங்கீதா பட் ஆகியோர் நடித்துள்ள படம் ஆரம்பமே அட்டகாசம். காதல் கதை கொண்ட இப்படத்தில் மூன்று லிப் டூ லிப் முத்த காட்சிகளை வைத்துள்ளாராம் இயக்குநர்.
 
பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் முத்த காட்சிகள் சாதாரணமாகிவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் அந்த நிலை இல்லை. லிப் டூ லிப் முத்த காட்சி என்றாலே தமிழ் சினிமாவில் அலறும் நடிகைகள் உண்டு. ஆனால் இதற்கு நடிகை சங்கீதா ஒப்புக்கொண்டாராம். 
 
இருந்தாலும் இயக்குநர் நடிகையிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். முதலில் நடிப்பேன் என கூறிவிட்டு பின்பு முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக முன்னெச்சரிக்கை காரணமாக இயக்குநர் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.