தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒடிய மொழி பாடல் ஒன்று வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் மொழி எல்லைகளை தாண்டி பல பாடல்கள் திடீரென ட்ரெண்டாவது வாடிக்கையாக உள்ளது. அப்படியாக கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் சீ சீ சின் என்ற ஒடிய மொழி பாடல் ட்ரெண்டாக இருந்து வருகிறது. பலரும் ஜாலியாக டான்ஸ் ஆடும் ரீல்ஸ்களுக்கு கூட இந்த பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பாடல் ஒரு சோக பாடல். காதல் தோல்வியில் காதலன் பாடும் இந்த பாடல் பலிபுல் Baliphul என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் அர்த்தம் இதுதான்..
Dhanake Dekhlu Tui Nani Sina
Manake Chihnilu Naai
நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை
Sunake Chinlu Banaake Chinlu
Manush Chinlu Naai
நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை
Dhan Naai Boli Mora Paakhe Nani
Taar Kaachhe Uthigalu
உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்
Dhan Achhe Sina Man Naai Taakhe
Tui Jaani Na Paaralu
நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம்
Gote Din Mishaa Jagidelu Naai
Kede Katha Karidelu
நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை
Muu Gaan Jaaikiri Aasalaa Bele
Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi
நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய்
நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்
Chhi Chhi Chhi Re Nani Chhi
உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி
Chhi Chhi Chhi Re Nani Chhi
உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன்
Edit by Prasanth.K