ஞாயிறு, 2 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:26 IST)

சூர்யா 47 படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய்ப் பரவும் தகவல்!

தான் பெரிதும் நம்பிய ‘கங்குவா’ படம் சொதப்பியதால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் உடனடியாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் வாடிவாசல் படத்திலும் அதற்கடுத்து லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யாவின் 47 ஆவது படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான பசில் ஜோசப் இயக்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.

இது ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பசில் ஜோசப் ஏற்கனவே இயக்கிய மின்னல் முரளி என்ற சூப்பர் ஹிட் படம் பேய் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் இப்போது உடனடியாக தொடங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.