1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:09 IST)

இயக்குனர் சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

இயக்குனர் சங்க தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தமிழ்நாடு இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டுள்ளது 
 
மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது சிரமம் என்பதால் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.